ஏணியாய் இருந்து ஏற்றிவிட்டவர்களை எட்டித்தள்ளிய இந்திய கிரிக்கெட் நிர்வாகம்..!

ICC டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் கோஹ்லி தலைமையிலான அணி முன்னேறியிருக்கும் நிலையில் ரசிகர்கள் இந்தியாவின் வெற்றிக்காக காத்திருக்கிறார்கள்.

இந்தநிலையில் 20 பேர் கொண்ட இந்திய குழாத்திலிருந்து வாஷிங்டன் சுந்தர், ஷர்த்துல் தாகூர், அக்ஷர் பட்டேல், மாயங் அகர்வால் ஆகிய வீரர்கள் அணியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிலையில் ரசிகர்கள் பலரும் பலவித கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்தியா இறுதி போட்டிக்கு முன்னேறுவதற்கு குறித்த வீரர்களது பங்களிப்பு அபரிவிதமானது, ஆயினும் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தால் அணியில் 15 பேருக்கு மேல் தக்க வைக்க முடியாது எனும் அடிப்படையில் அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டுள்ளமை ரசிகர்களுக்கும் கவலைதான்.

 

இங்கிலாந்துடன் இந்தியா தனது சொந்த மண்ணில் இடம்பெற்ற முதல் போட்டியில் தோல்வியை தழுவியிருந்தாலும், அக்ஷர் பட்டேலின் அற்புத பந்துவீச்சு மூலமாக அதன்பின்னர் இந்திய அணி தொடரை வென்றது.

அதேபோன்றுதான் அகர்வால், சுந்தர், ஷர்த்துல் தாகூர் ஆகியோரும் அவுஸ்திரேலியாவில் காட்டிய அசாத்திய திறமையாலேயே இந்திய அணி இறுதி போட்டியை எட்டியது என்பதை மறக்க முடியாது.

ஆயினும் அணியில் இவர்களால் இடம்பிடிக்க முடியாது போனமை அவர்களது துரதிஷ்டம் என்றே சொல்லலாம்.