பிப்ரவரி 2024க்கான ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை இந்தியாவின் யஷஷ்வி ஜெய்ஸ்வால் வென்றுள்ளார்.
நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் மற்றும் இலங்கையின் பாத்தும் நிசங்க ஆகியோரும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (12) சர்வதேச கிரிக்கெட் பேரவை ஜெய்ஸ்வாலுக்கு மாதத்தின் சிறந்த வீரர் விருது வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
பிப்ரவரியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு தொடர்ச்சியான டெஸ்ட் போட்டிகளில் இரண்டு இரட்டை சதங்களை அடித்தார்.
ராஜ்கோட்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் (12 சிக்ஸர்கள்) ஒரு பேட்ஸ்மேன் அடித்த அதிக சிக்ஸர்கள் என்ற உலக சாதனையையும் ஜெய்ஸ்வால் சமன் செய்தார்.
மேலும் டெஸ்ட் போட்டியில் 1,000 ரன்களை அதிவேகமாக கடந்த இரண்டாவது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் பெற்றார்.
பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் இன்னிங்ஸில் 112 சராசரியுடன் 560 ரன்கள் எடுத்தார். இதில் 20 சிக்ஸர்களும் அடங்கும்.