ஐசிசி டீஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி …!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது .
இன்னிங்ஸ் மற்றும் 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்து இந்த தொடரை 3-1 என்று நிறைவுக்கு கொண்டுவந்தது இந்திய அணி.
இதன் மூலமாக ஐசிசி முதல் முறையாக நடத்துகின்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் எனப்படும் டெஸ்ட் போட்டிகளுக்கான உலகக்கிண்ணத் தொடரில் இறுதிப் போட்டிக்கு இந்திய நுழைந்துள்ளது.
முன்னதாக முதல் அணியாக நியூசிலாந்து இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற நிலையில் நியூசிலாந்து அணியை இங்கிலாந்து லோட்ஸ் மைதானத்தில் வைத்து வருகின்ற ஜூன் மாதம் 18ஆம் திகதி இந்தியா ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் சந்திக்கப் போகிறது .
உலகக்கிண்ண போட்டிகளுக்கு நிகரானதாக கணிக்கப்படும் , கருதப்படும் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் கிண்ணத்தை வெல்லும் முனைப்பில் கோலி தலைமையிலான அணி களம் குதித்திருக்கிறது.
கோலியின் கிரிக்கெட் வாழ்வில் மிகப்பெரும் மகுடமாக இருக்கும் என்று கருதப்படுகின்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா வெற்றி பெறுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம் .
இதே லோட்ஸ் மைதானத்தில் 1983ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் இந்திய அணி உலகக்கிண்ணம் ஒன்றை வெற்றி கொண்டிருந்ததையும் நினைவு படுத்ததக்கதே .
லோர்ட்ஸ் மைதானம் இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ராசியான மைதானமாக கருதப்படும் நிலையில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனமும் இப்போது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் மீது குவிந்திருக்கிறது .
இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.