ஐசிசி பாரபட்சம் சர்வதேச கிரிக்கெட் பேரவை ஏற்பாடு செய்திருக்கும் ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் நிறைவுக்கு வந்திருக்கிறது.
முதலாவது தொடரில் இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு தேர்வாக சாம்பியன் மகுடத்தை நியூஸிலாந்து அணி பெற்றுக் கொண்டது.
இதன் அடிப்படையில் ஐசிசி சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது அத்தியாயத்தில் போட்டி அட்டவணைகளை சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளது.
அதேபோல் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஒவ்வொரு அணியும் தாய் நாட்டில் மூன்று தொடரையும், வெளிநாடுகளில் மூன்று தொடர்களிலும் விளையாடி இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் வழமை போன்று ஒவ்வொரு தொடருக்கும் 120 புள்ளிகள் வழங்கப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.
அதிகமான போட்டிகளில் விளையாட போகும் அணியாக இந்திய அணி காணப்படுகிறது, இந்திய அணி அதிகம் 18 போட்டிகளில் விளையாடவுள்ளது.
நடப்புச் சம்பியனான நியூஸிலாந்து 13 போட்டிகளில் மட்டுமே விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியா -19 டெஸ்ட் போட்டிகள்
அவுஸ்திரேலிய -18 டெஸ்ட் போட்டிகள்
தென் ஆபிரிக்கா -15 டெஸ்ட் போட்டிகள்
பங்களாதேஸ்- 12 டெஸ்ட் போட்டிகள்
நியூசிலாந்து- 13 டெஸ்ட் போட்டிகள்
இலங்கை, பாகிஸ்தான், மேற்கத்திய தீவுகள் – 14 டெஸ்ட் போட்டிகள்
Team | Home Series | Away Series |
India | NZ, SL, AUS | ENG, SA, BAN |
Pakistan | AUS, NZ, ENG | WI, BAN, SL |
Australia | ENG, WI, SA | PAK, SL, IND |
England | IND, NZ, SA | AUS, WI, PAK |
New Zealand | BAN, SA, SL | IND, ENG, PAK |
South Africa | IND, BAN, WI | NZ, ENG, AUS |
Sri Lanka | AUS, PAK, WI | BAN, IND, NZ |
West Indies | PAK, ENG, BAN | SA, SL, AUS |
Bangladesh | PAK, SL, IND | NZ, SA, WI |