ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில்…!
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது அத்தியாயத்தின் போட்டிகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன.
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான தொடர் அதுமாத்திரமல்லாமல் மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான தொடர் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது அத்தியாயத்தின் போட்டிகளாக தற்சமயம் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் இதுவரைக்கும் இடம்பெற்றிருக்கும் போட்டிகளின் அடிப்படையில் ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிகளின் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் காணப்படுகிறது.
இதுவரைக்கும் இரண்டு ஆட்டங்களில் விளையாடி இருக்கும் இந்திய அணி 14 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் மூன்றாம் இடங்களை மேற்கிந்திய தீீவுகள் , இங்கிலாந்து அணிகள் பெற்றிருக்கின்றன.
சர்வதேச கிரிக்கெட் பேரவை நடத்திய முதலாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் அத்தியாயத்தின் இறுதி போட்டியில் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துக் கொண்ட இந்திய அணி, இறுதிப் போட்டியில் விளையாடியது.
நியூஸிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து கிண்ணத்தை கைப்பற்றி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் அத்தியாயத்தில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகின்றமையும் கவனிக்கத்தக்கது.