ஐபிஎல் இல் புதிய சாதனையுடன் ஆர்சிபி யின் கனவை தகர்த்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ..!
ஐபிஎல் தொடரின் இன்றைய நாளில் ஹைதராபாத் மற்றும் பெங்களூர் அணிகள் இடையிலான ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
மிக விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் புவனேஷ்வர் குமாருடைய சிறப்பான பந்துவீச்சு மூலமாக 4 ஓட்டங்களால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மிகப் பெரிய ஒரு ஓட்ட எண்ணிக்கையை பெறும் என எதிர்பார்த்தாலும், இறுதியில் RCB யின் பந்துவீச்சு மிகச்சிறப்பாக கைகொடுக்க 141 ஓட்டங்களுக்குள் ஆர்சிபி கட்டுப்படுத்தியது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணிக்கு டி வில்லியர்ஸ் இறுதி வரைக்கும் ஆட்டமிழக்காமல் 19 ஓட்டங்களை பெற்று ஆடுகளத்தில் இருந்தாலும் ,புவனேஷ்வர் குமார் சிறப்பாக பந்துவீச 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சன் ரைஸ் ஹைதராபாத் இந்த போட்டியில் வெற்றி பெற்றது.
இதன் மூலமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் தொடரின் 3-வது வெற்றியை தனதாக்கியதோடு 150க்கும் குறைவான ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டு, ஐபிஎல் போட்டிகளில் அதிக தடவைகள் வெற்றி பெற்ற அணி என்கின்ற பெருமையும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பெற்றது.
10 தடவைகள் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், 11 ஆவது தடவையாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 150க்கும் குறைவான போட்டியில் வெற்றியை தனதாக்கி உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதன் மூலமாக புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து குவாலிபயர் ஆட்டத்தில் விளையாடி வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு இலகுவாக நுழையலாம் எனும் கனவு இப்போது RCB க்கு தாமதமாகிறது.
ஆர்சிபி அணி புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்திற்கு வந்தால், இறுதிப்போட்டியை எட்டுவதற்கு இரண்டு ஆட்டங்களில் விளையாட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது, எலிமினேட்டர் ஆட்டத்தில் விளையாடி ,மீண்டும் ஒரு குவாலிபையர் ஆட்டத்தில் விளையாடி அதன் பின்னரே இறுதி போட்டிக்கு எட்ட முடியும் .
ஆனால் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களுள் இருந்தால் நேரடியாக குவாலிபயர் ஆட்டத்தில் ஆடுவதன் மூலம் இறுதிப்போட்டிக்கு நுழையும் வாய்ப்பு இருக்கிறது என்பதும் சுட்டிக் காட்டத்தக்கது .
அதற்கான காத்திருக்கும் ஆர்சிபி, இப்போது இந்த தோல்வி மூலமாக நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது.
எமது யூடியூப் தளத்தை Subscribe செய்யுங்கள் ????