ஐபிஎல் க்கு ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்தனர் மும்பை இந்தியன்ஸ் இன் முக்கிய வீரர்கள் மூவர்..!
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் ஐந்தாவது இறுதியுமான போட்டி ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து இந்திய வீரர்கள் பலர் ஐபிஎல் தொடர்பான அடுத்தகட்ட ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய மூன்று வீரர்களான ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், பும்ரா ஆகியோர் இன்றைய நாளில் ஐக்கிய அரபு அமீரகத்தை சென்றடைந்துள்ளனர் .
நேரடியாக இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இருந்து இவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தை சென்றடைந்து, ஐபிஎல் மும்பை இந்தியன்ஸ் குழுவினரோடு இணைந்து கொண்டுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.
Bubble to Bubble முறைமையின் அடிப்படையில் இவர்கள் இப்போது மும்பை அணியின் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.