ஐபிஎல் போட்டிகளால் நியூசிலாந்து, பாகிஸ்தான் தொடருக்கு வந்த புது வித சோதனை..!
இந்திய கிரிக்கெட் சபை நடத்துகின்ற ஐபிஎல் தொடரின் இரண்டாம் கட்டப் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற செப்டம்பர் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிலையில் செப்டம்பர் 17ஆம் திகதி ஆரம்பமாகும் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான சர்வதேச தொடருக்கு இந்த ஐபிஎல் காரணமாக சிக்கல் உருவாக்கியிருக்கிறது.
குறிப்பாக சர்வதேச கிரிக்கெட் பேரவை நடத்தும் அத்தனை வகையான போட்டிகளிலும் டிஆர்எஸ்( DRS) எனப்படும் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.
ஆனால் இம்முறை பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்த தொடரின் போது இந்த DRS சிஸ்டம் பயன்பாட்டில் இருக்காது என அறிய தரப்பட்டிருக்கிறது.
என்ன காரணம் என்றால் ஐபிஎல் தொடருக்கு, இந்த டிஆர்எஸ் நடைமுறையை தரக்கூடிய குழுவினர் அனைவரையும் ஐபிஎல் ஏற்பாட்டுக் குழுவினர் வாடகைக்கு பெற்று விட்டார்கள்.
ஆகவே DRS நடைமுறையை வழங்கும் தொழில்நுட்ப குழுவினர் இல்லாமையே இதற்கான காரணம் என அறியப்படுகிறது, ஒரு சர்வதேச கிரிக்கெட் ஆட்டத்தை பாதிக்கின்ற அளவிற்கு ஐபிஎல் கிரிக்கெட்டை ஆண்டு கொண்டிருக்கிறதா எனும் கேள்வி ரசிகர்களுக்கு எழுந்திருக்கிறது.