ஐபிஎல் போட்டிகளில் அதிக ஆட்டநாயகன் விருதை வென்றவர்கள் விவரம் ..!

ஐபிஎல் போட்டிகளில் அதிக ஆட்டநாயகன் விருதை வென்றவர்கள் விவரம் ..!

ஐபிஎல் தொடரில் நேற்று இடம்பெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக மூன்று தோல்விகளுக்குப் பின்னர் நேற்று முதல் வெற்றியை பெற்றுக்கொண்டது.

இதன் மூலமாக மும்பை இந்தியன்ஸ் அணி Play Off பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளை ஓரளவிற்கு தக்க வைத்திருக்கிறது.

நேற்று மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றுக்கொண்டது ஐந்தாவது வெற்றியாகும், போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 135 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பதிலளி்த்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு போலார்ட் மற்றும் பாண்டியா ஆகியோரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்தனர், பொலார்ட் 10,000 ஓட்டங்களை டுவென்டி டுவென்டி போட்டிகளில் பெற்றதுடன் மாத்திரமல்லாமல் நேற்றைய போட்டியில் 300 வது விக்கெட்டை கைப்பற்றினார்.

 இதன் மூலம் 10,000 ஓட்டங்களையும் 300 விக்கெட் கைப்பற்றிய ஒரே வீரர் என்ற பெருமை பொல்லார்ட் வசமானது. இதன் மூலம் நேற்று ஆட்டநாயகன் விருதையும் பெற்றுக்கொண்டார்.

 ஐபிஎல்லில் இதுவரை அதொகை ஆட்டநாயகன் விருதை வென்றவர்கள் வரிசையில் டீ வில்லியர்ஸ் 25 ஆட்ட நாயகன் விருது பெற்று முதலிடத்தில் காணப்படுகின்றார்.

அதிக ஐபிஎல் ஆட்டநாயகன் விருதை வென்றவர்கள் விவரம் வருமாறு.

25 – ஏபி டீ வில்லியர்ஸ்
22 – கிறிஸ் கெயில்
18 – ரோஹித் சர்மா
17 – டேவிட் வார்னர்
17 – எம்எஸ் தோனி
16 – ஷேன் வாட்சன்
16 – யூசுப் பதான்
14 – கீரான் பொல்லார்ட்*
14 – சுரேஷ் ரெய்னா

எங்கள் விளையாட்டு.Com காணொளிகளைப் பார்ப்துடன் Subscribe செய்யுங்கள் ???