இந்திய பிரீமியர் லீக் (IPL) 2021 இல் பங்கேற்க இலங்கை தேசிய கிரிக்கெட் வீரர்கள் துஷ்மந்த சமீர மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்று அறிவித்துள்ளது.
வீரர்களுக்கான அனுமதி வழங்குவது குறித்து தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்து எஸ்.எல்.சி IPL விளையாட அனுமதித்துள்ளது.
இலங்கை, தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் முடிந்ததைத் தொடர்ந்து செப்டம்பர் 15 முதல் ஆரம்பிக்கும் ஐபிஎல் தொடரில் விளையாட இருவருக்கும் No objection Certificate ‘தடையில்லா சான்றிதழ்’ வழங்கப்பட்டது.
ஐசிசி ஆடவர் டி 20 உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிகளுக்கு முன்னதாக இரண்டு வீரர்களும் ஒக்டோபர் 10 இலங்கை அணியுடன் இணையவேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி Play off தகுதி பெற்றால் இரு வீரர்களும் Play off தவறவிடக்கூடும் என்பதும் முக்கியமானது.
ஐபிஎல்லின் பிளேஆஃப் மற்றும் இறுதிப் போட்டியில் வனிந்து மற்றும் சமீரா விளையாடினால், அவர்களால் உலகக் கோப்பை தகுதிப் போட்டியில் இலங்கை அணிக்காக விளையாட முடியாது என்பதால் தேசிய அணியுடனான போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அனுமதி வழங்கப்பட்டது.
அக்டோபர் 18, 20 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இலங்கை தகுதிச்சுற்றில் பங்கேற்கிறது.
அக்டோபர் 18 – நமீபியாவுக்கு எதிராக
அக்டோபர் 20 – அயர்லாந்துக்கு எதிராக
அக்டோபர் 22 – நெதர்லாந்துக்கு எதிராக
என்பதும் குறிப்பிடத்தக்கது.
T20 உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு இலங்கை அணி தகுதி பெற வேண்டுமாக இருந்தால், சிறிய அணிகளுடன் ஆரம்ப கட்ட தகுதி சுற்று ஆட்டங்களில் விளையாடி பின்னர் super 12 ஆட்டங்களுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் இலங்கை தேசிய அணி தள்ளப்பட்டிருக்கின்றமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது