ஐபிஎல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி இன்னும் ஒரு கிரிக்கெட் சபை தங்கள் வீரர்களை விளையாட அனுமதித்தது..!
UAE யில் இடம்பெறவிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அத்தியாயம் வருகின்ற செப்டம்பர் மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிலையில் வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல்லின் இரண்டாவது கட்டத்தில் விளையாடுவதில் சிக்கல் நிலைமை தொடர்ந்தது.
அந்தந்த நாடுகளின் சர்வதேச தொடர்கள் அடுத்து வரவுள்ள இருபது-20 உலக கிண்ணம் போன்ற தொடர்கள் காரணமாக தங்கள் நாட்டு வீரர்களை IPL ல் விளையாடுவதற்கு கிரிக்கெட் சபைகள் அனுமதிக்க தயக்கம் காட்டின.
இந்த நிலையில் ‘The Telegraph’ செய்திகளின் அடிப்படையில் இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் இரண்டாவது அத்தியாயத்தில் விளையாட வாய்ப்பு இருக்கிறது என செய்தி வெளியிட்டுள்ளது.
குறிப்பாக இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டிகள் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அட்டவணைப்படுத்தப்பட்டிருந்தாலும் அந்த போட்டிகள் இப்போது அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் இடம்பெறவிருப்பதாக தெரியவருகிறது.
ஆதலால் இங்கிலாந்து கிரிக்கெட் சபை தங்கள் வீீரர்கள் IPL இரண்டாவது அத்தியாயத்தில் விளையாடுவதற்கு ECB வீரர்களுக்கு அனுமதி வழங்கும் எனவும் செய்திகள் வெளிவந்திருக்கின்றன.
முன்னதாக நியூசிலாந்து கிரிக்கெட் சபை நியூஸிலாந்தின் வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார்கள் என்று உறுதிப்படுத்தி இருக்கும் நிலையில், இங்கிலாந்து வீரர்களும் விளையாட முடியும் என்கின்ற செய்தி ஐபிஎல் ரசிகர்கள் கொண்டாட்டத்தை தோற்றுவித்துள்ளது.
ஜோஸ் பட்லர், ஜோஃப்ரா ஆர்ச்சர், லியாம் லிவிங்ஸ்டன், ஒயின் மோர்கன், சாம் கர்ரான், மொயீன் அலி, ஜொன்னி பெயர்ஸ்டோ, டாம் கர்ரன் உள்ளிட்ட பலர் IPL அணிகளில் இடம்பிடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.