ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தடவைகள் பிளே ஓஃப் சுற்றுக்கு தேர்வான அணிகள்- சென்னை அணி முதலிடத்தில்..!
14வது ஐபிஎல் போட்டித் தொடர் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது, 14வது ஐபிஎல் போட்டித் தொடரின் Play off க்குரிய 4 அணிகளும் தேர்வாகியுள்ளன.
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், பான்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் இது மாத்திரமல்லாமல் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் Play Off சுற்றை உறுதிப்படுத்தியிருக்கின்றன.
இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகளில் வரலாற்றின் அடிப்படையில் அதிக தடவைகள் Play Off என்று பார்த்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 ஆவது தடவையாக Play off தேர்வாகியுள்ளது.12 தடவைகள் ஐபிஎல் தொடரில் விளையாடியிருக்கிறது. இரண்டு ஆண்டுகள் சென்னை சூதாட்ட தடை காரணமாக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ,மூன்று கிண்ணங்கள் சென்னை இடம் உள்ளன.
அதேபோன்று 9 தடவைகள் மும்பை இந்தியன்ஸ் அணி Play off சென்றுள்ளது,இவர்கள் மொத்தம் 14 தடவைகளில் விளையாடியிருக்கிறார்கள். 5 கிண்ணங்கள் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் உள்ளது.
மூன்றாவது இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (7) , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (7) அடுத்து டெல்லி கேப்பிடல்ஸ் (6) ஆகிய அணிகள் இருக்கின்றன.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ஆறு தடவைகள் Play Off தேர்வாகியுள்ளது, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி நான்கு தடவைகளிலும் பஞ்சாப் கிங்ஸ் இரண்டு தடவைகளும் தேர்வாகியுள்ளன.