ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி..!

ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி

2024 ஐபிஎல் தொடரில், தனது 42வது வயதில் ஆடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூத்த வீரர் தோனி ஐபிஎல் வரலாற்றில் வேறு எந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும் செய்யாத மாபெரும் மைல்கல் சாதனை ஒன்றை செய்து இருக்கிறார்.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனி 9 பந்துகளில் 28 ரன்கள் குவித்து சிஎஸ்கே அணியின் ஸ்கோர் 170 ரன்களை கடக்க முக்கிய காரணமாக இருந்தார். அவர் இந்தப் போட்டியில் விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேனாக 5000 ரன்களை கடந்து புதிய மைல்கல் சாதனை படைத்தார். ஐபிஎல் தொடரில் இதுவரை வேறு எந்த விக்கெட் கீப்பரும் இந்த மைல்கல்லை தொடவில்லை.

257 ஐபிஎல் போட்டிகளில் ஆடி உள்ள தோனி 5169 ரன்கள் குவித்துள்ளார். இதில் சில போட்டிகளில் அவர் விக்கெட் கீப்பராக செயல்படவில்லை. அந்த வகையில் விக்கெட் கீப்பராக ஆடிய போட்டிகளில் மட்டும் அவர் 5000 ரன்கள் என்ற மைல்கல்லை கடந்து இருக்கிறார்.

தோனியை தவிர வேறு எந்த விக்கெட் கீப்பரும் 200 ஐபிஎல் போட்டிகளுக்கு மேல் ஆடவில்லை. அதனாலேயே அவர்கள் யாராலும் 5000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்ட முடியவில்லை. தோனி தன் 42 வயதிலும் ஐபிஎல் தொடரில் புதிய சாதனைகளை முறியடித்து வருகிறார். நேற்றைய போட்டியில் லக்னோ அணிக்கு எதிராக 2 சிக்ஸ், 3 ஃபோர் அடித்தார். கடைசி இரண்டு ஓவர்களில் சிஎஸ்கே அணி 34 ரன்கள் சேர்த்த நிலையில் அதில் தோனி மட்டுமே 27 ரன்களை சேர்த்தார். அவரது பேட்டிங்கை பார்த்து அழுத்தத்துக்கு உள்ளன லக்னோ அணியின் பந்துவீச்சாளர்கள் அதைக் வைடுகளை வீசினார்கள்.

இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 176 ரன்கள் குவித்தது. அடுத்து பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 19 ஓவர்களில் எல்லாம் வெற்றி இலக்கை எட்டியது. க்விண்டன் டி காக் 54 ரன்களும், கே எல் ராகுல் 82 ரன்களும் குவித்தனர். இவர்கள் இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 15 ஓவர்களில் 134 ரன்கள் குவித்து அசத்தினர். அதன் பின் 2 விக்கெட்கள் இழந்தாலும் லக்னோ அணி எந்த சிக்கலும் இன்றி வெற்றி இலக்கை 19வது ஓவரின் கடைசி பந்தில் எட்டியது.