ஐபிஎல் வரலாற்றில் அதிக வெற்றிகளைப் பெற்றுக் கொண்ட அணிகள் -மும்பை இந்தியன்ஸ் அணி முதலிடம் ..!
14வது ஐபிஎல் போட்டி தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றது, இந்த போட்டி தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில் Play off தொடர்பில் ரசிகர்கள் கவனம் திரும்பியுள்ளது .
இந்த நிதியில் ஐபிஎல் வரலாற்றில் அதிக வெற்றிகளைப் பெற்றுக் கொண்டு அணிகள் தொடர்பில் ஒரு விடயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக வெற்றிகளைப் பெற்றுக் கொண்டு அணிகள் வரிசையில் மும்பை இந்தியன்ஸ் அணி 126 வெற்றிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது .
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 115 வெற்றிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது ,மூன்றாவது இடத்தில் 106 வெற்றிகளுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நான்காவது இடத்தில் உள்ளது.
பெங்களூர் அணியின் நேற்றைய வெற்றி ஐபிஎல் வரலாற்றில் அவர்களது 100 வது வெற்றியாக பதிவானது.
இந்த பட்டியலில் டெல்லி கேப்பிடல்ஸ் (96) ஐந்தாவது இடத்தில் பஞ்சாப் குங்ஸ் (94) ,அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் (86) ஆகிய அணிகள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.