ஐபோன் ஒன்றை அன்பளிப்பாக வழங்கிய சனத் .

தனியார் தொலைக்காட்ச்சி நிகழ்ச்சியொன்றின் போட்டி நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற போட்டியாளர் ஒருவருக்கு சனத் ஜெயசூரிய பெறுமதியான ஐபோன் ஒன்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

கல்வி நடவடிக்கைக்காக மடிக்கணனி ஒன்றின் தேவை இருந்ததால் குறித்த போட்டி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று வெற்றிபெற்ற ஷுக்ரா முனவ்வர் எனும் பெண்மணி இலங்கையில் தற்போது பேசுபொருளாக இருக்கின்றார்.

அவரது திறமைக்கு மகுடம் சூடும் விதமாகவே சனத் நேரடியாக சென்று தனது பாராட்டுதலையும் பரிசிலையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஓய்வை அறிவித்த நடுவர்- ஒக்சென்போர்ட்
Next articleதேர்வுக்குழு உறுப்பினரான அப்துர் ரசாக்.