ஒக்ஸ்போர்டு ஜனாதிபதி கிண்ணம் 2024 மாபெரும் இறுதிப்போட்டி..!
ஹமீட் அல் ஹுசைனி கல்லூரியின் 80களின் குழுவினால் நடத்தப்படும் 14வது அழைப்பு பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டியான ஒக்ஸ்போர்டு ஜனாதிபதி கிண்ணம் 2024 ன் மூன்றாம் இடத்திற்கான போட்டி மற்றும் இறுதிப் போட்டி என்பன 2024 மார்ச் 07 ஆம் திகதி பிற்பகல் 4:00 மணி முதல் கொழும்பு சுகததாச மைதானத்தில் நடைபெறவுள்ளது
மூன்றாம் இடத்துக்கான போட்டி (4:00 மணி)
கேட்வே கல்லூரி எதிர் அல் ஹிலால் மத்திய கல்லூரி
மாபெரும் இறுதிப்போட்டி (6:30 மணி)
ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி எதிர் புனித தோமஸ் கல்லூரி
இவ்விறுதிப்போட்டியில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி அதிமேதகு ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதம அதிதியாகவும், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் கல்வி அமைச்சர் கௌரவ கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்கள் கௌரவ அதிதியாகவும், 1996 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத்தை வென்று தந்த அணித்தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ அர்ஜுன ரணதுங்க சிறப்பு அதிதியாகவும் மற்றும் ஏனைய பலர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்,
இவ்விறுதிப்போட்டியானது சுகததாச மைதானத்தின் இரவு நேர ஒளி விளக்குகளின் கீழ் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.