இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரில் அஷ்வின் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று முன்னாள் அவுஸ்திரேலிய வீரர் பிராட் ஹோக் கொரிக்கை விடுத்துள்ளார்.
34 வயதான அஷ்வின், 2017 ம் ஆண்டு சாம்பியன்ஸ் கிண்ண போட்டிகளுக்குப் பின்னர் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளுக்கான அணியில் இணைத்துக்கொள்ளப்படவில்லை.
இவரது துடுப்பாட்ட ஆற்றல், விக்கெட் வீழ்த்தும் திறன், சிக்கனமான பெருத்திகள் எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கையில் அஷ்வின் கண்டிப்பாக இந்தியாவின் ஒருநாள் போட்டி அணிக்கு தேவையானவர் என்று ஹோக் கருத்து வெளியிட்டுள்ளார்.
அஷ்வின் 111 ஒருநாள் போட்டிகளில் 150 விக்கெட்களையும், 46 T20 போட்டிகளில் 52 விக்கெட்களையும், 76 டெஸ்ட்டில் 401 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.