ஒரு முன்னாள் கோச்சா இன்னொரு கோச்சுக்கு சொல்ல விரும்பறேன்..

ஒரு முன்னாள் கோச்சா இன்னொரு கோச்சுக்கு சொல்ல விரும்பறேன்..

‘கடினமான நேரங்கள் வரும் , அப்பெல்லாம் மூச்சை இழுத்துவிடுங்கள் கொஞ்சம் சூழ்நிலைகளுக்கு விலகி நின்று பாருங்கள், உங்களுக்குக் கஷ்டமா இருந்தாலும் முகத்தில் ஒரு புன்னகையைக் காட்டுங்கள்’

இப்படி முடியுது Dravid , புது coach Gambhir க்கு அனுப்பின audio message.

‘Hello Gowtham உலகத்தின் exiting பணியான இந்தியன் டீமுக்கு கோச்சாக உங்கள வரவேற்கிறேன். 3 வாரங்கள் முன்புதான் நான் கண்ட கனவுகளுக்கும் மேலாக இந்திய அணியுடன் என் coach பணியை முடித்தேன். Barbados லும், மும்பையிலும் மறக்க முடியாத நிகழ்வாக அது அமைந்துவிட்டது. எல்லாவற்றிற்கும்‌ மேலாக நான் பொக்கிஷமாகக் கருதுவது நான் அணியினருடன் இருந்த நினைவுகளையும்‌, அவர்களுடைய நட்பையும்தான் !

நீங்களும் அதுபோலவே இருக்க வேண்டுமென விரும்புகிறேன். Fully fit வீரர்களை அணிக்குத் தேர்ந்தெடுத்து வெல்ல வாழ்த்துகள். மேலும் உங்களுக்கு கொஞ்சம் அதிஷ்டமும் வாய்க்கட்டும், ஏனென்றால் coachகளாகிய நாம் நம் இயல்பைவிட விட அறிவாளிகளாகவும் , புத்திசாலிகளாகவும் பார்க்கப்படவேண்டியிருக்கிறது.

களத்தில் உங்கள் அற்பணிப்புணர்வையும் , விட்டுக்கொடுக்காத போராடும் குணத்தையும் சக partner ஆகவும் , fielder ஆகவும் நான் அருகிலிருந்து பார்த்தவன்.

IPLல் எல்லா சீசனும் ஜெயிக்க வேண்டும் என்கிற உங்களின் முனைப்பை நன்கு அறிவேன் அதற்காக இளம் வீரர்களைத் தேர்ந்தெடுப்பதும் , அவர்களை வழிநடத்தி தயார்படுத்துவதும் உங்களின் வெல்வதற்கான தீவிரத்தைக் காட்டிற்று.

அதையே இந்திய அணியிலும் செயல்படுத்துவீர்கள் என நம்புகிறேன். இங்கே எதிர்பார்ப்பு அதிகமாகவும் அதை நிறைவேற்றுவது கடினமாகவும் இருக்கும். ஆனால் எந்தக் கடினாமான காலத்திலும் நீங்கள் தனித்துவிடப்பட‌மாட்டீர்கள் உங்களுக்கு எப்போதும் support staffகளும் , முன்னாள் வீரர்களும், management ம் துணையாக நிற்பார்கள்.

குறிப்பாக யாருக்காக நீங்கள் விளையாடுகிறீர்கள் என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள் , அது இந்திய ரசிகர்களுக்காகத்தான். இருந்தாலும் எப்பொழுதும் அணிக்கு ஆதரவாகவே இருங்கள்.

வாழ்த்துகள் Gowtham , இந்திய அணியை இன்னும் அதிக உயரங்களுக்கு எடுத்துச்செல்வீர்கள் என நம்புகிறேன் ! 💐

இந்த Dravid ன் செய்தி தன்னை emotional ஆக்கியிருக்குன்னு சொல்லீருக்கார் காம்பீர். 👌😎👍