ஒரே போட்டியில் ஏராளம் சாதனைகள் படைத்த அஷ்வின்..!
இந்திய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் அஷ்வின் அகமதாபாத்தில் இடம்பெற்றுவரும் 3 வது டெஸ்ட்டில் ஸ்டோக்ஸ் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் புதிய சாதனை படைத்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் பென் ஸ்டோக்ஸ்சின் விக்கெட்டை 11 வது தடவையாக அஷ்வின் கைப்பற்றியுள்ளார். இது ஸ்டோக்ஸ்க்கு எதிரான அஷ்வினின் 11 வது டெஸ்ட் ஆகும்.
ஒரே வீரரை அஷ்வின் டெஸ்ட்டில் அதிக தடவை வீழ்த்திய சந்தர்ப்பமாகவும் இந்த சந்தர்ப்பம் பதிவானது. முன்னர் டேவிட் வோர்னரை 10 தடவையும், அலிஸ்டையார் குக்கை 9 தடவையும், எட் கோவான், ஆண்டர்சன் ஆகியோரை 7 தடவையும் டெஸ்ட் போட்டிகளில் அஷ்வின் வீழ்த்தியுள்ளார்.
அனைவரும் இடதுகை ஆட்டக்காரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் அனைத்துவகைப் போட்டிகளிலும் அஷ்வின் ஸ்டோக்சின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் 600 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளனர்.
இதுமாத்திரமல்லாமல் டெஸ்ட் போட்டிகளில் 400 வது விக்கெட்டையும் அஷ்வின் இன்று கைப்பற்றியுள்ளார்.
முரளிதரனுக்கு பின்னர் வேகமாக 400 டெஸ்ட் விக்கெட்களை விரைவாகை கைப்பற்றியவர் அஷ்வின் என்பது குறிப்பிடத்தக்கது.
முரளிதரன் 72 டெஸ்ட்டிலும், அஷ்வின் 77 வது டெஸ்ட்டிலும் இந்த சாதனை படைத்துள்ளனர்.