ஒலிம்பிக்கில் பெண்கள் பிரிவில் திருநங்கைகள் பங்கேற்க தடை!

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐ.ஓ.சி.) புதிய விதிமுறைப்படி, ஆணாக இருந்து பெண்ணாக மாறிய திருநங்கைகள் ஒலிம்பிக் மற்றும் ஐ.ஓ.சி. நடத்தும் அனைத்து போட்டிகளிலும் பெண்கள் பிரிவில் பங்கேற்க தடை விதிக் கப்பட்டுள்ளது.

இந்த முடிவு மரபணு சோதனை மற்றும் வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் பெண்கள் பந்தயத்தில் நேர்மை யான, சரிசம போட்டியை உறுதி செய்யும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், லாஸ்ஏஞ்சல்சில் நடக்கும் ஒலிம்பிக்கில் பெண்கள் விளையாட்டுகளில் திருநங்கைகளுக்கு அனுமதி இல்லை என்று கூறியிருந்தார். அவரது யோசனையை ஒலிம்பிக் கமிட்டி ஏற்றுக் கொண்டுள்ளது.

Previous article2026 FIFA உலகக் கோப்பைக்கான பாதை!
Next articleImpact player விதி 2027 வரை தொடரும்