KL ராகுல் ஐந்தாவது தொடர்ச்சியான ஐபிஎல் சீசனில் 500 ரன்களை கடந்த முதல் இந்திய வீர்ர் ஆனார்..!
KL ராகுல் புதன்கிழமை ஐபிஎல் சீசனில் 500 ரன்கள் என்ற மைல்கல்லை தொடர்ந்து ஐந்தாவது முறையாக கடந்தார்.
இந்தச் சாதனையின் மூலம், தொடர்ந்து ஐந்தாவது ஐபிஎல் சீசனில் 500 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
மும்பையில் உள்ள டாக்டர் Dy பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த இந்தியன் பிரீமியர் லீக் 2022 இன் 66வது போட்டியின் போது வலது கை தொடக்க ஆட்டக்காரர் இந்த சாதனையை நிகழ்த்தினார்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த ராகுல் ஐபிஎல் 2018ல் 659 ரன்கள் குவித்தார். 2019ல் ராகுல் 593 ரன்களை எடுத்தார்.
you Tube Link link ?
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற ஐபிஎல் 2020 இல், பஞ்சாப் கேப்டன் ராகுல் 670 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்றார்.
ஐபிஎல் 2021ல், ராகுல் 13 போட்டிகளில் 616 ரன்கள் குவித்தார்.இப்போது புதிய அணியான லக்னோ LSG கேப்டன் KL ராகுல் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 68* ரன்கள் எடுத்ததன் மூலமே இந்த சாதனையை தனதாக்கினார்,
அதே நேரத்தில் சக தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டி காக் ஆட்டமிழக்காமல் சதம் (140) விளாசினார், IPL அறிமுக வீரர்கள் KKR க்கு எதிராக எந்த விக்கெட்டையும் இழக்காமல் 210 ரன்களை பெற்று புதிய சாதனை படைத்தனர்.
இறுதிவரைக்கும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த ஆட்டத்தின் இறுதி ஓவரில் 21 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் மிக அதிரடியாக ஆடிய கல்கத்தாவின் ரிங்கு சிங் இறுதிநேரத்தில் ஆட்டமிழக்க, பரபரப்புக்கு பஞ்சமில்லாத இந்த ஆட்டத்தில் லக்னோ 2 ஓட்டங்களால் வெற்றிபெற்று play off தேர்வான இரண்டாவது அணியானது.