ஓபேட் மெக்காய் பந்துவீச்சில் சுருண்டது இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அபார வெற்றி…!

சுற்றுலா இந்திய அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான 2வது இருபதுக்கு 20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில், சர்வதேச டி20 களத்தில் இந்திய அணிக்கு எதிராக சிறந்த பந்துவீச்சை பதிவு செய்ததன் மூலம் அணிக்கு வெற்றியும் தேடிக்கொடுத்தார்.

Toss வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களம் இறங்கிய இந்திய அணி 19.4 ஓவர்களில் அனைத்து வீரர்களையும் இழந்து 138 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கேப்டன் ரோஹித் சர்மாவை நேற்று முதல் பந்திலேயே ரன் அடிக்காமல் ஓபேட் மெக்காய் ஸ்டேடியத்துக்கு அனுப்பினார். அதிலிருந்து தொடங்கிய மெக்காயின் விக்கெட் வேட்டையில் இந்திய அணியின் 6 பேட்ஸ்மேன்களும் 17 ரன்களில் ஆட்டமிழக்க செய்து வெளியேற்றினார்.

முன்னதாக, சர்வதேச டி20 களத்தில் இந்திய அணிக்கு எதிராக இலங்கை வீரர் வனிது ஹசரங்க சிறந்த பந்துவீச்சை பதிவு செய்திருந்தார். கடந்த ஆண்டு இந்திய அணிக்கு எதிராக 9 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நேற்று, ஓபேட் மெக்காய் இந்த சாதனையை முறியடித்ததுடன் அவரது பந்துவீச்சு T20 சர்வதேசத்தின் சிறந்த பந்து வீச்சுகளில் ஏழாவது இடத்தைப் பிடித்தது.

இலக்கை துரத்த களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் 19 ஓவர்களில் 2 பந்துகளில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டினர். மேற்கு இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரெண்டன் கிங் 52 பந்துகளில் 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 68 ரன்கள் எடுத்தார். அதன்படி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.

இந்தியா : 138/10 (19.2)
ஹர்திக் பாண்டியா 31(31), ரவீந்திர ஜடேஜா 27(30)
ஒபைட் மெக்காய் 6/17, ஜேசன் ஹோல்டர் 2/23

மேற்கிந்திய தீவுகள் : 141/5 (19.2)
பிரெண்டன் கிங் 68(52), டெவோன் தாமஸ்* 31(19)
ரவீந்திர ஜடேஜா 1/16