ஓய்வுபெறும் இலங்கை வீரர்களுக்கு திடீர் கட்டுப்பாடுகள் விதிப்பு…!
2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 ஆம் திகதி நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு கூட்டத்தில், ஓய்வு பெற்ற மற்றும்/அல்லது தேசிய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற விரும்பும் வீரர்கள் தொடர்பாக பின்வரும் முடிவுகளை எடுத்துள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தரப்பு அறிவித்துள்ளது.
1. தேசிய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற விரும்பும் தேசிய வீரர்கள், ஓய்வு பெறுவதற்கான விருப்பத்தை இலங்கை கிரிக்கெட்டுக்கு மூன்று மாத காலத்திற்குள் அறிவிக்க வேண்டும்.
2. வெளிநாட்டு ஃபிரான்சைஸ் லீக்குகளில் விளையாடுவதற்கு ‘’ஆப்ஜெக்ஷன் சர்டிபிகேட்கள்’’ (NOCs) பெற விரும்பும் ஓய்வுபெற்ற தேசிய வீரர்கள், ஆறு மாத ஓய்வு தேதியை நிறைவு செய்த வீரர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
3. லீக் நடத்துவதற்கு முந்தைய பருவத்தில் நடத்தப்படும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் 80% போட்டிகளில் விளையாடியிருந்தால் மட்டுமே, ஓய்வுபெற்ற தேசிய வீரர்கள் LPL போன்ற உள்ளூர் லீக்குகளில் விளையாடுவதற்கு தகுதியுடையவர்களாகக் கருதப்படுவார்கள்.
மேற்படி தீர்மானங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் என இலங்கை கிரிக்கட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இலங்கை தேசிய கிரிக்கெட் வீரர்கள் பலர் திடீர் ஓய்வு முடிவுகளை வெளியிட்டு ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தேர்வுக்கு குழுவை நெருக்கடிக்குள் தள்ளிவரும் நிலையிலேயே இந்த அதிரடியான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பானுக ராஜபக்ச, அஞ்சேலோ பெரேரா, தனுஷ்க்க குணதிலக ஆகியோர் தமது ஓய்வு முடிவுகளை அண்மையில் அறிவித்திருந்தமை கவனிக்கத்தக்கது.