“நான் எதிர்கொண்டதிலேயே அதிக மனவருத்தம் தந்த தொடராக ஆஸ்திரேலியா தொடர் அமைந்துவிட்டது. 2014 இங்கிலாந்து தொடருக்குப்பிறகு இதுதான் சரியாக அமையாத தொடர்.
இன்னுமொருமுறை நான் ஆஸ்திரேலியா சென்று இதை சரிசெய்ய முடியுமா எனத்தெரியவில்லை.
நான் ஓய்விலிருந்து வரப்போவதில்லை. ஆனால் ஒலிம்பிக்கில் ஒரு தங்கப்பதக்கம் கிடைக்குமென்றால் அதற்காக மட்டும் கொஞ்சம் விளையாடிவிட்டு ஒரு பதக்கத்தை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றுவிடுவேன். 👏
தோணி கேப்டனாக இருந்தபோது , நான் துணை கேப்டனாக இருந்தபோது.. ஒவ்வொரு ஓவர் வீசப்படும்போதும் நான் அவர் காதருகில் சென்று, ‘இவரை இங்கே நிற்க வைக்கலாம், அவரை அங்கே நிறுத்தலாம், ஒரு கேட்ச் கிடைத்தால் போதும் நாம் ஜெயித்துவிடுவோம்’ என்று சொல்லிக்கொண்டே இருப்பேன். அவர் இது ‘பயங்கரமாக இருக்கிறது’ என்பது போல் என்னைப்பார்ப்பார். ” 😂
– வீராட் கோஹ்லி.
✍️ Arun Kumar G







