ஓய்வு முடிவை மாற்றிக்கொண்ட ஹசரங்க..!

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த வனிந்து ஹசரங்க மீண்டும் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட்டில் இணைந்துள்ளார்.

இலங்கை அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வனிந்து ஹசரங்க, ஓய்வு பெறுவதாக அறிவிக்கும் போது 4 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் 196 ரன்களையும் எடுத்திருந்தார் (ஒரு இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோர் 59).

தனது ஓய்வு முடிவை மாற்றிக்கொண்ட வனிந்து ஹசரங்க, பங்களாதேஷ் அணியுடன் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.