ஓவல் மைதானத்தில் கடைசி 10 போட்டிகளில் பெறப்பட்ட 4வது இன்னிங்ஸில் ஓட்ட எண்ணிக்கையை என்ன தெரியுமா ?

ஓவல் மைதானத்தில் கடைசி 10 போட்டிகளில் பெறப்பட்ட 4வது இன்னிங்ஸில் ஓட்ட எண்ணிக்கையை என்ன தெரியுமா ?

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில்  இடம்பெற்றுவருகிறது.

ஓவல் மைதானத்தில் இடம்பெற்றுவரும் 4வது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஓவல் மைதானத்தில் 4 வது இன்னிங்ஸில் ஓட்ட எண்ணிக்கை நிலவரம் என்ன என ரசிகர்கள் தேடிப்பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஓவல் மைதானத்தில் 250க்கும் அதிகமான ஓட்ட எண்ணிக்கை துரத்தி வெற்றிகொண்ட சந்தர்ப்பங்கள் இதுவரைக்கும் வெறுமனே இரண்டு சந்தர்ப்பங்களில் மட்டுமே தான் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இது மாத்திரமல்லாமல் இந்த ஓவல் மைதானத்தில் 4வது இன்னிங்சில் 175க்கும் மேற்பட்ட ஓட்ட எண்ணிக்கை துரத்தி அடிக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் 6 மட்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆக மொத்தத்தில் 4வது இன்னிங்சில் இந்த மைதானத்தில் 200க்கும் அதிகமான ஓட்ட எண்ணிக்கையை துரத்தி அடிப்பது சிரமமான காரியம் என்றே நம்பப்படுகிறது.

இந்த நிலையில் இறுதி 10 போட்டிகளில் 4வது இன்னிங்சில் பெறப்பட்ட ஓட்ட எண்ணிக்கை விபரம் ??

? 263 (தோல்வி)
? 345 (தோல்வி)
? 252 (தோல்வி)
? 42/0 (வெற்றி)
? 206/5 (Draw)
? 148/6 (வெற்றி)
? 348 (தோல்வி)
? 198/4 (வெற்றி)
? 369/6 (Draw)
? 4/0 (Draw)

இந்திய அணி தமது 2 வது இன்னிங்ஸில் 466 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 368 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.