கங்குலி கிரிக்கெட்டின் தாதா -பேர்த்டே ஸ்பெசல்..!.

கங்குலி கிரிக்கெட்டின் தாதா -பேர்த்டே ஸ்பெசல்..!.

ஒரு football ரசிகன் அண்ணன் வழிகாட்டலில் கிரிக்கெட் இல் நுழைகிறான். கிரிக்கெட்டின் தாதா ஆகின்றான்.

எவனுக்காகவும் தன்னுடைய குணத்தை மாத்தாத ஒருவன் அதுவே அவனை பல இடங்களில் தூக்கி போட்டது ஆனாலும் தன்னை மாத்தாது இருந்த ஒருவர் அவரே Ganguly ( The prince of kolkotta)

என்னை அறியாமல் இந்திய அணியை நான் ஆதரிக்க காரணம் தாதா தான். அந்தக் காலக் கட்டத்தில் நமக்கு கிரிக்கெட்ல பெரிதும் தெரிஞ்ச அணிகள் என்ற இந்தியா, இலங்கை தான் ஒரு வேளை அயல் நாடு என்பதால் இருக்கும்.

நல்ல பெரிய முட்டை கண்ணும் அந்த helmet போட்டு அதால பார்க்கும் போது ஒரு கம்பீர பார்வை அது. அப்போ பெரிதும் அதிரடி ஆட்டம் என்றால் இடது கை துடுப்பாட்ட காரர்கள்தான் இருந்தார்கள், அதாவது நான் cricket பக்கத்து வீட்டில் சென்று பார்க்கும் போது இந்தியா இலங்கை போட்டிகள் தான் அதில் சனத் மற்றும் Ganguly ரெண்டு பேரும் தான் அதிரடி ஆட்டம் என்று அந்த வீட்டு அண்ணா சொல்லுவார். அதுக்கு ஏத்த மாதிரி ஆட்டமும் இருக்கும் இருவரதும். அதுவே ஒரு காரணமாக இருக்கலாம் நான் Ganguly ரசிகனாக இருந்து இந்திய ரசிகன் ஆவதற்கு.

தாதா முதல் 50 ஓட்டங்களை கடக்கும் வரை நிதான ஆட்டம் அந்த 50 ஓட்டம் அடிச்ச பிறகு ஆட்டம் இருக்கே “எங்க ஆட்டம் வெறித்தனம்” அதே மாதிரி தான் இருக்கும். பந்துகள் out of park அப்படி இருக்கும். அப்படி அடிகள் இருக்கும் 50 இன் பின்.

என்னதான் ஒரு அதிஷ்டம் இல்லாத தலைவன் ஆனாலும் ஆக்க பூர்வமான தலைவன். இந்திய அணி தலைவர்களில் ICC tournament இல் knock out stage இல் 107.5 என்னும் சராசரியை வைத்து உள்ளார். Dhoni எல்லா நாட்டு தலைவருக்கும் தலைவனா இருந்தவர் என்றால் அவருக்கே தலைவனாக இருந்தவர் தாதா. தற்போது பேசும் டோனி என்னும் அத்தியாயம் ஆரம்பிக்க தொடக்க புள்ளி தாதா அதே போல் தற்போது இந்திய அணி இவ்வாறு இருக்க காரணமும் தாதா தான்.

இளைஞர்கள் அறிமுகம் அதிகமாக இருந்தது வாய்ப்புகள் அதிகம் வழங்கப்பட்டது தாதா ஆல் தான். அணி தலைவர் ஆக இருந்த காலத்தில் பார்த்து பார்த்து செதுக்க தொடங்கி இருந்தார். இப்போது ராஜா கோபுரம் போல காட்சியளிக்குது இந்திய அணி என்றால் தாதா வால் தான்.

அணி தலைவராக ICC champions trophy ஒன்னு தான் எடுத்து இருந்தாலும். தூர நோக்கு பார்வை கொண்டு இருந்தவர் தாதா. நவீன கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவின் மிகச் சிறந்த அணித் தலைவராகக் கருதப்படுகிறார்.

இவர் தலைமை வகித்த காலத்தில் இவரே அணியில் அதிகூடிய ஓட்டங்களை பெற்ற வீரர், அதிகூடிய 100 ஓட்டங்களை பெற்ற வீரர், அதிக ஆட்ட நாயகன் விருதையும் பெற்று இருந்தார். இது தன்னுடைய காலத்தில் தன்னையே நம்பி தானே full responsibility என்ற ஒரு ஆட்டத்திற்கு அடையாளம்.

“முன் வினை உன்னை
துரத்தி துரத்தி தொடருமே தன்
வினை தன்னை அழுத்தி
அழுத்தி அமுக்குமே

நேற்று நீ செய்த
பாவங்கள் அனைத்துமே
தேடியே வந்து உன்னை
ஒரு நாள் கொழுத்துமே

எளிய எளிய
உயிரை ஓா் வலிய
ஒருவன் எடுத்தால்
நினைத்திடாத ஒரு நாள்
உன்னை எவனோ ஒருவன்
முடிப்பான்” இந்த பாடல் Gangulyக்கு நன்கு பொருந்தும்.

Flintoof செய்ததுக்கு லோர்ட்ஸ் இல் வழங்கிய replay இருக்கே அது ஒன்று போதும் கிரிக்கெட்டின் தாதா என்று சொல்லவே.

God of the off side என்றும் செல்லமாக வர்ணிக்கப்பட்டு வந்தவர்.

டெஸ்ட் debut இல் இங்கிலாந்து lord’s மைதானத்தில் 131 ஓட்டங்கள் பெற்றது முதல் போட்டியில் வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்டம் என்ற ஒரு சாதனையாக இருந்தது. முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் 100 ஓட்டம் பெற்ற வீரர்களில் ஒருவர்.
ஒரு ஆண்டில் அதி கூடிய 100 ஓட்டம் பெற்றவர்கள் பட்டியலில் 2000 ஆம் ஆண்டு 7 தடவை 100 ஓட்டங்கள் பெற்றதன் மூலம் 2வது நிலையில் உள்ளார்.

Maharaja of Indian Cricket
Happy birthday Ganguly

#சந்துரு – திருமலை