கரீபியன் பிரீமியர் லீக் டி20 போட்டியில் ஓடியன் ஸ்மித் வேகத்தில் யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல் மட்டை இரண்டாக உடைந்து மட்டைக் கைப்பிடி தனி மட்டை மற்ற பகுதி என இரண்டாக உடைந்தது, இதன் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
கிறிஸ் கெய்ல் செயிண்ட் கிட்ஸ் நெவிஸ் பேட்ரியட்ஸ் அணிக்கு அரையிறுதியில் ஒபனிங்கில் இறங்கினார். கிறிஸ் கெய்ல் 27 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். வெற்றி பெற வேண்டிய இலக்கு 179 ரன்கள். இந்த இன்னிங்சில்தான் கெய்ல் பேட் இரண்டாக உடைந்தது, உடைத்தவர் ஓடியன் ஸ்மித்.
இந்த மேட்ச் வின்னிங் இன்னிங்ஸில் ஒரு ருசிகர விஷயம் நடந்தது, 4வது ஓவரில் ஓடியன் ஸ்மித் ஒரு பந்தை வேகமாக வீச அதனை கெய்ல் அடித்த போது அவரது மட்டை ஹேண்டில் தனியாக மட்டை தனியாக இரண்டாக உடைந்தது. கெய்ல் வெறும் பேட் ஹேண்டிலுடன் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்த காட்சி தான் சமூக ஊடகங்களில் வைரலானது.
Gayle bats broke in #CPL21pic.twitter.com/trQs3H4qMd
— Viyatu Sports (@ViyatuSports) September 15, 2021
இன்று, அதாவது செப்.15ம் தேதி பேட்ரியட்ஸ் அணி செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியை இறுதி போட்டியில் எதிர்த்து ஆடுகிறது. முதல் அரையிறுதியில் டிரிபாங்கோ நைட் ரைடர்ஸ் அணியை செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தது.
இறுதிப் போட்டியில் பிராவோ தலைமையிலான செயிண்ட் கிட்ஸ் நெவிஸ் பேட்ரியட்ஸ் அணி சாம்பியனானது , ஐபிஎல் ஆடும் மே.இ.தீவுகள் வீரர்கள் மற்றும் பிற கரீபியன் லீக் வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க UAE புறப்படுகின்றனர்.
கெய்ல் பஞ்சாப் கிங்ஸுக்கும், எவின் லூயிஸ் ராஜஸ்தானுக்கும், கிரன் பொலார்ட் மும்பை இந்தியன்சுக்கும் டிவைன் பிராவோ சிஎஸ்கேவுக்கும் இம்ரான் தாகிரும் சிஎஸ்கேவுக்கும் நிகோலஸ் பூரன் பஞ்சாப் கிங்ஸுக்கும் திரும்புகின்றனர்.