கரீபியன் பிரீமியர் லீக் (CPL) 2021 சீசன் ஆரம்பம் – முதல் போட்டியலேயே பிராவோ சாகசம்..!

கரீபியன் பிரீமியர் லீக் (CPL) 2021 சீசன் ஆரம்பம் – முதல் போட்டியலேயே பிராவோ சாகசம்..!

செயின்ட் கிட்ஸில் வியாழக்கிழமை கயானா அமேசான் வாரியர்ஸுடன் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் மோதியது.

டாஸ் வென்ற டிரின்பாகோ கேப்டன் கீரான் பொல்லார்ட் எதிரணியை பேட்டிங் செய்தார்.

இந்த முதலாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகளின் ரவி ராமபோல் வீசிய பந்தை எதிர்கொண்ட நிக்கோலஸ் பூரன் , எல்லைக் கோட்டைத் தாண்டி சிக்சர் பெறுவதற்கு முற்பட்டார்.

அந்த நேரத்தில் எல்லைக்கோட்டருகே களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த டரன் பிராவோ அற்புதமான பிடியெடுப்பை நிகழ்த்தி எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

விறுவிறுப்பாக இடம்பெற்ற கரிபியன் பிரீமியர் லீக் போட்டி தொடரின் முதலாவது போட்டியில் கயானா அமேசன்ஸ் அணி 9 ஓட்டங்களால் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கரீபியன் பிரீமியர் லீக் அமோகமாக ஆரம்பித்திருக்கிறது.

வீடியோ இணைப்பு ???