கவுண்டி கிரிக்கெட் விளையாட சென்ற அர்ஷ்தீப் சிங்.. காரணமே ராகுல் டிராவிட் தான்.. வெளிவந்த உண்மை!

கவுண்டி கிரிக்கெட் விளையாட சென்ற அர்ஷ்தீப் சிங்.. காரணமே ராகுல் டிராவிட் தான்.. வெளிவந்த உண்மை!

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி அர்ஷ்தீப் சிங் அசத்தினார். இதனைத் தொடர்ந்து இந்திய டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் நிரந்தர வீரராக பார்க்கப்பட்டு வரும் அர்ஷ்தீப் சிங், விரைவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன.

அதற்கேற்ப சில மாதங்களுக்கு முன்பாக இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் அர்ஷ்தீப் சிங் பங்கேற்றார். ரெட் பாலை சிறப்பாக கையாண்ட அர்ஷ்தீப் சிங், நன்றாக இரு பக்கத்திலும் ஸ்விங் செய்து பலரின் கவனத்தை ஈர்த்தார். இந்த நிலையில் அர்ஷ்தீப் சிங் குறித்து இந்திய முன்னாள் பவுலிங் பயிற்சியாளர் பராஸ் ஆம்ரே பேசுகையில், அர்ஷ்தீப் சிங் விவகாரத்தில் அவருக்கு அதிகளவிலான ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாட அறிவுறுத்தப்பட்டது.

ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அர்ஷ்தீப் சிங் செயல்பாடுகள் சிறப்பாக அமைந்துள்ளன. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் அவரால் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தாக்கம் ஏற்படுத்த முடியும் என்று பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது அவருக்கு ரெட் பாலில் சவால் உள்ளது.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது அவருக்கு சிறிய ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. அப்போது அவரை ரஞ்சி டிராபியில் விளையாடவே அறிவுறுத்தி இருந்தோம். ஏனென்றால் உடல் அளவிலும், மனதளவிலும் அர்ஷ்தீப் சிங்கால் கூடுதல் வலிமை பெற முடியும். அங்கு தான் அவரால் அதிகளவிலான பால்களை வீச முடியும். எவ்வளவு அதிகமாக பந்துவீசுகிறார்களோ, அவ்வளவு வேகமாக பந்தை எப்படி கட்டுப்படுத்தலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

அந்த நேரத்தில் தான் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு அர்ஷ்தீப் சிங்கிற்கு வந்தது. அப்போது ராகுல் டிராவிட்டிடம் கேட்ட போது, உடனடியாக செல்லுமாறு கூறினார். ஏனென்றால் கவுண்டி கிரிக்கெட் போட்டிகள் 4 நாட்கள் நடத்தப்பட்டு, 2 நாட்கள் ஓய்வு அளிக்கப்படும். அதன்பின் 3வது நாளில் அடுத்தப் போட்டியில் விளையாடுவார்கள். இதனிடையே பயணமும் மேற்கொள்ள வேண்டும். அதனால் அதிகளவிலான சவாலை அர்ஷ்தீப் சிங் சந்திப்பார் என்று தெரிவித்தார்.

Previous article42 வயதில் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் விளையாட விரும்பும் இங்கிலாந்து ஜாம்பவான்!ஆர்வம் காட்டும் CSK
Next articleபுதிய பந்தில் பவுலிங், பேட்ஸ்மேன்களுக்கு பக்கா ஸ்கெட்ச்… கம்பேக் கொடுக்க தீவிரம் காட்டும் உம்ரான் மாலிக்!