காலி முகத்திடல் போராட்டக்காரர்களை தாக்க சிறைக்கைதிகள் பயன்படுத்தப்பட்டனரா?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கும்பல் தாக்குதலில் அங்கம் வகித்த ஒரு குழுவினர் நேற்று தாம் பாதுக்காவில் உள்ள வட்டரெக்கா திறந்தவெளி சிறை முகாமில் உள்ள கைதிகள் என தெரியவந்துள்ளது.
நேற்று கொழும்பில் அலரிமாளிகைக்கு அருகாமையிலும் காலி முகத்திடல் மைதானத்திலும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கும்பல் தொடர்பில் பல செய்திகள் வெளியாகின்றன.
It was reported that prisoners were bought today (10) to attack the protesters at #GotaGoGama. pic.twitter.com/xipnq14JW1
— DailyMirror (@Dailymirror_SL) May 9, 2022
நிலைமையைக் கட்டுப்படுத்த நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட போதிலும், இந்தத் தாக்குதல்கள் இலங்கை முழுவதும் பரவலான அமைதியின்மைக்கு வழிவகுத்தது.
சப்பவத்தில் சிக்குண்ட கலகக்்கார்ர்கள் பொதுமக்களால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தாம் வடரேகா திறந்தவெளி சிறை முகாமில் புனர்வாழ்வளிக்கப்பட்ட கைதிகள் என கைதிகள் தெரிவித்தனர்.
நேற்று காலை அலரிமாளிகையில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பில் கலந்துகொள்வதற்காக சிறைச்சாலையிலிருந்து சிறைச்சாலை அதிகாரி ஒருவரால் தாம் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் அம்பிகா சத்குணநாதன், இது தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளின் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
பல நடைமுறைகளைப் பின்பற்றாமல் சிறையில் அடைக்கப்பட்டவர்களை சிறையிலிருந்து வெளியே எடுக்க முடியாது என்று சுட்டிக்காட்டிய அவர், வடரக கண்காணிப்பாளருக்கு (SP) இது பற்றித் தெரியாது என்பது மிகவும் சாத்தியமற்றது என்றும் கூறினார்.
2 videos circulating of persons who say they are incarcerated persons who’ve been brought to attack peaceful protestors.
Imprisoned persons can’t be taken out of prison without following several procedures & quite impossible Wataraka Superintendent (SP) had no knowledge of it. pic.twitter.com/053OkhgaqZ
— Ambika Satkunanathan (@ambikasat) May 10, 2022
இந்தக் கைதிகளை அழைத்து வருமாறு கண்காணிப்பாளருக்கு யார் பணிப்புரை வழங்கியது என்றும், இதற்கு முன்னரும் கண்காணிப்பாளர் இதைச் செய்தாரா என்றும் சத்குணநாதன் மேலும் கேள்வி எழுப்பினார்.
“சிறைகளின் பொதுச்செயலாளர் என்ன நடவடிக்கை எடுப்பார்? சிறையில் அடைக்கப்பட்ட மக்கள் இப்போது எங்கே? சிறையில் அடைக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் ஏழைகள் மற்றும் பின்தங்கிய குடிமக்கள் என்பது பெரும்பாலானோருக்குத் தெரியாது, ”என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.