கால்பந்து போட்டிகளில் விளையாட இந்தியாவிற்கு FIFA தடை விதித்தது…!

சர்வதேச கால்பந்து போட்டிகளில் இந்தியாவிற்கு உடனடியாக தடை!

சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து சர்வதேச கால்பந்து தொடர்பான நடவடிக்கைகளையும் தடை செய்யுமாறு இந்தியாவிற்கு உத்தரவிட்டுள்ளது. அவர்களின் கால்பந்து விளையாட்டில் மூன்றாம் தரப்பினர் தலையிடும் சம்பவங்களின் விளைவே இது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் கொள்கைகளுக்கு எதிராக மூன்றாம் நபர்களை பயன்படுத்தி கால்பந்தை பராமரிக்க இந்தியா செயல்பட்டு வருவதுதான். இதன் காரணமாக அவர்கள் பெரிய அளவில் மோசடி மற்றும் ஊழல் செய்வதாக ஃபிஃபா குற்றம் சாட்டியுள்ளது.

2020 டிசம்பரில் நடைபெறவிருந்த இந்திய கால்பந்து அதிகாரப்பூர்வ தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறாததால், இந்திய கால்பந்து சம்மேளனத்தின் தலைவராக இருந்த பிரபுல் படேல் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த சம்பவத்தால் இந்திய கால்பந்து அதிகாரிகள் விரைவில் கால்பந்து அதிகாரப்பூர்வ தேர்தலை நடத்த தயாராகி வருவதாக செய்திகள் பரவி வருகிறது.

இருப்பினும், இதன் காரணமாக, இந்தியாவில் அக்டோபர் 11-30 வரை நடைபெறவிருந்த 17 வயதுக்குட்பட்ட பெண்கள் கால்பந்து உலகக் கோப்பையை நீக்க சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு முடிவு செய்தது.

85 ஆண்டுகால இந்திய கால்பந்து வரலாற்றில் சர்வதேச கால்பந்து போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படுவது இதுவே முதல்முறை. இதன் காரணமாக இனி வரும் எந்த ஒரு சர்வதேச கால்பந்து போட்டியிலும் இந்திய கால்பந்து அணி பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Previous articleIPL தொடர்பில் பாரிய குற்றச்சாட்டை முன்வைக்கும் டெய்லர்-அதிருப்தியில் ரசிகர்கள்…!
Next articleUAE T20 லீக்- அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியில் 3 இலங்கை வீரர்கள்- முழுமையான விபரம்..!