கால்பந்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் மிகப்பெரிய மாற்றங்கள் -மாப்பே ,ரொனால்டோ..!
கால்பந்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் கால்பந்து உலகின் மிகப்பெரிய இரண்டு மாற்றங்கள் நிகழவுள்ளன.
பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரரும் இப்போது PSG அணியின் முன்கள வீரராகவும் விளையாடும் கைலியன் மாப்பே ரியல் மாட்ரிட் கழகத்துடன் ஒப்பந்தமாக உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.
இது மாத்திரமல்லாமல் முன்னைநாள் ரியல் மாட்ரிட் வீரரும் தற்போதைய ஜுவன்டர்ஸ் நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ இங்கிலாந்தின் மான்செஸ்டர் சிட்டி கழகத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன .
உறுதிப்படுத்தப்பட்ட பிந்திய செய்திகளுக்காக காத்திருக்கலாம்.