கிண்ணம் வெல்லவில்லையாயினும் மக்கள் மனங்களை வென்ற RCB _ நீல நிற ஜெர்சியில் கெத்துக் காட்ட காரணம் என்ன தெரியுமா ?
ஐபிஎல் 2021 இன் UAE போட்டிக்கு இன்னும் 4 நாட்களே உள்ளன, நீண்ட காத்திருப்புக்குப் பிறகு 2 ம் கட்ட போட்டிகள் நடப்பு சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையேயான பிளாக்பஸ்டர் மோதலுடன் மீண்டும் 19 ம் திகதி தொடங்கவுள்ளது.
இந்த தொடரில் செப்டம்பர் 20 -ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதுகிறது என்பதால் ரசிகர்கள் இந்த ஆட்டம் தொடர்பிலும் காத்திருக்கிறார்கள்.
பெங்களூர் புள்ளிகளின் அட்டவணையின் மேல் பாதியில் உறுதியாக நிலைநிறுத்தப்பட்டிருந்தாலும், கொல்கத்தா அட்டவணையின் இறுதி நிலையில் இருப்பதாலும் கொஞ்சம் வித்தியாசமான போட்டியாக இது அமையவுள்ளது.
இதிலே வரவேகப்படக்கூடிய விடம் ஒன்றை RCB கையிலெடுத்துள்ளது ,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அவர்கள் ட்வீட்டில் நீல நிற ஜெர்சி அணிவதாக உறுதி செய்துள்ளது, மேலும் இது ஒரு கொடிய தொற்றுநோய்க்கு மத்தியில் இடைவிடாமல் போராடும் கோவிட் முன்கள பணியாளர்களுக்கு ஆதரவளிப்பத்தே இதன் பிரதான நோக்கமாகும்.
இந்த நீல நிற ஜெர்சி கொரோனாவுக்கு எதிராக களப்பணியாற்றும் முன்களப் பணியாளர்களது PPE கிட்களின் நிறத்தை ஒத்திருக்கிறது, முன்களத்தில் இருக்கும் போது அவர்களின் விலைமதிப்பற்ற சேவைக்கு மதிப்பை செலுத்துகிறது. கோவிட் தொற்றுநோய்க்கு எதிராக போராடுங்கள் என்பதை ஊக்குவிப்பதாக அமைகின்றது.
கோஹ்லி தலைமையிலான RCB அணி இதுவரை IPL கிண்ணங்களை எதனையும் வெற்றிகொள்ளவில்லையாயினும், அவர்கள் சமூகத்தின் மீது காண்பிக்கின்ற அக்கறையும், முன்னுதாரண நடவடிக்கைகளும் உண்மையில் பாராட்டத்தக்கவையே.
ஏற்கனவே பசுமை புரட்சி நடவடிக்கையாக RCB கடந்த பருவ காலங்களில் பச்சை நிறத்தில் சீருடை அணிந்து விளையாடியமையும் குறிப்பிடத்தக்கது.
RCB கிண்ணம் வெல்ல வில்லையாயினும் மக்கள் மனங்களை அதிகம் வென்றிருக்கின்றது எனலாம்.