கிரன் பொல்லார்டின் நீண்டகால ஐபிஎல் சாதனையை முறியடித்த மனிஷ் பாண்டே …! நேற்றைய போட்டியில் சம்பவம்.
14 வது ஐபிஎல் தொடரின் குழுநிலை ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவுக்கு வந்துள்ளன, இந்த நிலையில் நேற்று இடம்பெற்ற இறுதி நாள் ஆட்டங்களில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பங்கேற்றன.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் தலைவர் கேன் வில்லியம்சன் உபாதை காரணமாக நேற்று விளையாட முடியாமல் போக அணித்தலைவராக மனிஷ் பாண்டே பொறுப்பேற்று விளையாடினார்.
இது அவரது 153வது ஐபிஎல் ஆட்டமாக அமைந்தது, அதிக ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியபின், அணித்தலைவராக வழிநடத்திய பெருமை மனிஷ் பாண்டேக்கு கிடைத்தது.
ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியின் பொல்லார்ட், 132 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடி அதன் பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணியினுடைய தலைமைத்துவத்தை ஏற்று இருந்தார், இதுவே ஐபிஎல் போட்டிகளில் நீண்டகால சாதனையாகப் பார்க்கப்பட்டது. இந்த சாதனையை மனிஷ் பாண்டே முறியடித்துள்ளார்,
நீண்ட காலமாக ஐபிஎல் போட்டிகளில் ஆடினாலும், அதிக போட்டிக்குப் பின்னரே தலைவராக்கப்பட்ட சாதனையே நேற்று பாண்டே வசமானது, இதையும் தவிர சஞ்சு சம்சன் (107 போட்டிகள்) , ரவிச்சந்திரன் அஸ்வின் (111 போட்டிகள்), புவனேஸ்வர் குமார் (103 போட்டிகள்) ஆகியோரும் இந்தப் பட்டியலில் காணப்படுகின்றனர்.
நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை தோற்கடித்தது, இரண்டு அணிகளும் ஐபிஎல் பிளே-ஆப் சுற்றுக்கு தேர்வாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
l