கிரிக்கெட் களத்தில் காதல் தருணம் – சென்னை வீரரின் லவ் புரபோஷல் (காணொளி இணைப்பு )
இன்று இடம்பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையிலான போட்டியில் ஒரு சுவையான சம்பவம் ஒன்று பதிவானது.
இன்றைய போட்டியை பார்த்து ரசித்த பார்வையாளர்களுக்கு மைதானத்தில் ஒரு கண்கொள்ளா காட்சியை காண கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
பரபரப்பான இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 134 ஓட்டங்களை மட்டுமே பெற்று கொண்டது, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 134 ஓட்டங்களை 13 ஓவர்கள் நிறைவில் பெற்றுக்கொண்டமை கவனிக்கத்தக்கது.
ஒரு இலகுவான வெற்றியை பஞ்சாப் கிங்ஸ் அணி பெற்றுக் கொண்டாலும் சென்னை ரசிகர்கள் கொண்டாடுகின்ற ஒரு நிகழ்வு இன்று இடம்பெற்றது..
சென்னை அணியினுடைய பிரதான பந்து வீச்சாளரான தீபக் சஹார் இன்று போட்டி முடிந்த பின்னர், தன்னுடைய காதலியை லவ் ப்ரொபோஸ் செய்த சம்பவம் ஒன்று மைதானத்தின் பார்வையாளர்கள் அரங்கில் வெளியே பதிவானது.
பார்வையாளர் அரங்கில் இருந்த தன்னுடைய காதலியை தேடிப்போய் சென்னை பந்து வீச்சாளர் தீபாக் சஹார் காதல் மோதிரம் அணிவித்து தன் காதலைத் தெரிவித்து அவரை அரவணைத்து கட்டிப்பிடித்து காதலை பகிர்ந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு அரங்கில் இவ்வாறான சுவைமிகு சம்பவங்கள் அவ்வப்போது பதிவாகிக் கொண்டு இருக்கும் நிலையில் இந்த சம்பவம் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படுகிறது.
வீடியோ இணைப்பு ????