கிரிக்கெட் ரசிகர்களை அதிசயிக்க வைத்த இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஹர்லின் டியோலின் அசத்தலான படியெடுப்பு .(வீடியோ இணைப்பு )

கிரிக்கெட் ரசிகர்களை அதிசயிக்க வைத்த இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஹர்லின் டியோலின் அசத்தலான படியெடுப்பு .(வீடியோ இணைப்பு )

இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய மகளிர் அணி, இங்கிலாந்து மகளிர் அணியை எதிர்கொண்டு வருகின்றது.

நேற்றைய முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் இந்திய மகளிர் வீராங்கனையின் அற்புதமான படியடுப்பு இப்போது சமூக வலைத் தளங்களில் மிகப்பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

முன்னதாக ஒருநாள் தொடரை 2 க-1 என்று இழந்திருந்த இந்திய மகளிர் அணி, இப்போது T20 தொடரை சந்தித்திருக்கிறது.

நேற்று இடம்பெற்ற முதலாவது டுவென்டி டுவென்டி போட்டியில் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டக்வேர்த் லூயிஸ் முறை மூலமாக இந்திய மகளிர் அணி தோல்வியை தழுவினாலும், அவர்களுடைய வீராங்கனை ஹர்லின் டியோல் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரும் பேசுபொருள் ஆகியிருக்கிறார்.

ஒருநாள் தொடரின் போது ஸ்மித்ரி மந்தனா எனும் வீராங்கனை எடுத்த பிடியெடுப்பு ரசிகர்களை மிரள வைத்த நிலையில், அதையும் தாண்டிய அதி அற்புதமான ஒரு பிடியெடுப்பை நேற்றைய போட்டியில் ஹர்லின் டியோல் பெற்று அசத்தியிருக்கிறார்.

ஐபிஎல் போட்டிகளில் நாங்கள் எப்போதாவது பார்த்து ரசிக்கும் அதி அற்புதமான பிடியெடுப்புக்கு நிகரான படியெடுப்புக்கு ஹர்லீன் டியோல் சொந்தக்காரராகியிருக்கிறார்.

சமூக வலைதளங்களில் ஏராளமானவர்கள் இந்திய மகளிர் கிரிக்கெட்டர்களின் இந்த அதிசயிக்கத்தக்க சாதனையை புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்.

இவரது இந்த அதிசயிக்க வைக்கும் பிடியெடுப்பை நெட்டிசன்கள் பலர் டுவிட்டரில் தெறிக்கவிட்டு கொண்டாடுகறார்கள்.

Video Link ???

ஒருநாள் தொடரில் இன்னுமொரு மகளிர் வீராங்கனையான மந்தனா எடுத்த பிடியெடுப்பின் காணொளி.

???