கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மென்சஸ்டர்க்கு அதிர்ச்சி வைத்தியத்தை அரங்கேற்றியது யங்போய்ஸ்..!

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மென்சஸ்டர்க்கு அதிர்ச்சி வைத்தியத்தை அரங்கேற்றியது யங் போய்ஸ்..!

 கால்பந்து ரசிகர்கள் பெருவாரியாக எதிர்பார்த்து காத்திருந்த சாம்பியன் லீக் கால்பந்தாட்டப் போட்டிகள் ஆரம்பித்திருக்கின்றன.

சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டித் தொடரின் மிக முக்கியமான முதலாவது போட்டியான மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் யங் போய்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி எவரும் எதிர்பாராத விதமாக பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நிறைவுக்கு வந்துள்ளது.

குறிப்பாக கிறிஸ்டியானோ ரொனால்டோ, பெர்னான்டஸ், சாஞ்சோ போன்று மிகப் பிரபலமான பல நட்சத்திரங்களை உள்ளடக்கிய இங்கிலீஷ் பிரீமியர் லீக் அணியான மான்செஸ்டர் யுனைட்டட் கழகம் அவ்வளவாக பிரபலமில்லாத யங் போய்ஸ் கழகத்திடம் 2-1 என தோற்றுள்ளமை ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது.

தொடர்ந்து 17 சீசனாக சாம்பியன் லீக் கால்பந்தில் கலக்கும் ரொனால்டோ இந்த சீசனிலும் தன் வரவை மிகச்சிறப்பாக நிரூபித்தார், 12 ஆண்டுகளுக்குப் பின்னர் மன்செஸ்டர் யுனைட்டட் கழகத்தின் சார்பில் சாம்பியன் லீக்கில் விளையாடும் ரொனால்டோ 13 ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார், இது அவருடைய 135 ஆவது சாம்பியன் லீக் கோலாக அமைந்தது .

முப்பத்தி ஐந்தாவது நிமிடத்திலேயே மான்செஸ்டர் யுனைடெட் கழகத்தினுடைய விஸாகா எதிரணி வீர்ரை டக்கிள் செய்ய முற்பட்ட போது அவருக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட மான்செஸ்டர் யுனைடெட் அணி 10 வீரர்களுடன் விளையாடும் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

இதன் பின்னர் இரண்டாவது  2 வது பாதியில் 66 நிமிடத்தில் தங்களுடைய முதலாவது கோலை பெற்றுக் கொண்ட யங் போய்ஸ் போட்டி நிறைவுக்கு வருவதற்கு ஒரு சில வினாடிகளில் இருக்கின்ற நிலையில் மிகச் சிறப்பான முறையில் இரண்டாவது கோலை பெற்றுக்கொண்டது.

71 ஆவது நிமிடத்தில் ரொனால்டோவை வெளியில் அழைத்து லிங்கார்ட் உள் அனுப்பப்பட்டார், இவர் கொடுத்த தவறான பேக் பாஸ் இந்த சேம்பியன் லீக் கால்பந்தாட்ட போட்டி தொடரில் மென்சஸ்டர் கழகத்தினுடைய தோல்விக்கு காரணமாக அமைந்தது.

அவர் பாஸ் செய்த பந்தை சரியாக காலில் வாங்கிக் கொண்டு, அதனை கோலாக்கியிருந்தார் யங் போய்ஸ் வீீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எதிர்பாராவிதமாக மான்செஸ்டர் கழகத்திற்கு சாம்பியன் லீக் கால்பந்து தொடர் அதிர்ச்சியோடு ஆரம்பித்திருக்கிறது.