கிழக்கு மாகாண பாடசலைகளுக்கிடையிலான கடின பந்து கிறிக்கெட் சுற்றுப்போட்டி 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் திருகோணமலை இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
இச்சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசால சம்பியனாகவும், ஏறாவூர் அறபா வித்தியாலயம் 2 ஆம் இடத்தையும், மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி 3 ஆம் இடத்தையும் பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒரு முக்கிய விடயம் தரம் 11 வரை மாத்திரமே கொண்ட type 2 பாடசாலையான ஏறாவூர் அறபா வித்தியாலயம் பலம்பொருந்திய மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி, கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை, கந்தளாய் மத்திய கல்லூரி அணிகளை வெற்றி கொண்டு இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இரண்டாம் இடத்தை பிடித்துக்கொண்டது அனைவராலும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவான அனைத்து பாடசாலைகளுக்கும் விளையாட்டு.com இன் வாழ்த்துகள்.
U . L Rafiudeen 🤝