குஜராத்துக்கு எதிராக வரலாற்றில் முதல் வெற்றியை பதிவு செய்தது லக்னோ..!

2024 இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 21வது போட்டியில் யஷ் தாக்கூரின் 5 விக்கெட்டுக்கள் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸின் அரைசதத்தின் உதவியுடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

லக்னோவில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட் செய்யத் தீர்மானித்த சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது.

பதில் இன்னிங்சை விளையாடிய டைட்டன்ஸ் அணி 18.5 ஓவர்களில் 130 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

ஷுப்மான் கில் மற்றும் சாய் சதர்சன் ஆகியோர் தொடக்க விக்கெட்டுக்கு 6 ஓவர்களில் 54 ரன்கள் என்ற உறவை கட்டியமைத்த பின்னணியில் இந்தப் போட்டியின் வெற்றியை குஜராத் டைட்டன்ஸ் அணி பறிகொடுத்தது.

முதல் விக்கெட்டை இழந்த பிறகு சிறப்பான முறையில் களமிறங்கிய லக்னோ , குஜராத் அணியின் அனைத்து நம்பிக்கைகளையும் தகர்த்தனர்.

சாய் சுதர்சன் 31 , ஷுப்மன் கில் 19 , விஜய் சங்கர் 17 ரன்கள் பெற்றனர். ராகுல் தெவாடியா 30(25) ரன்கள் எடுத்தார்.

பந்துவீச்சில் யாஷ் தாக்கூர் 30 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். க்ருனால் பாண்டியா 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ அணியில் ஸ்டோனிஸ் 43 பந்துகளில் 58 பெற்றார். அவரது இன்னிங்ஸில் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் அடங்கும்.

நிக்கோலஸ் பூரன் 22 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 32 ரன்கள் எடுத்தார். கேஎல் ராகுல் 33 .

பந்துவீச்சில் உமேஷ் யாதவ் மற்றும் தர்ஷன் நல்கண்டே ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.