பஞ்சாப் கிங்ஸ் தலைமை பயிற்சியாளர் பதவிக்காக இயோன் மோர்கன், பெய்லிஸை அணுகும் நிர்வாகம்…!
இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) அடுத்த சீசனில் புதிய தலைமைப் பயிற்சியாளரைக் கொண்ட 2வது அணியாக பஞ்சாப் கிங்ஸ் (PPKS) அணி இருக்கும் என்று அறிக்கை தெரிவிக்கிறது.
அனில் கும்ப்ளேக்கு PBKS உடனான ஒப்பந்தம் செப்டம்பர் வரை நீடித்தாலும் அதை புதுப்பிக்க அணி நிர்வாகம் விரும்பவில்லை என தகவல்கள் கூறுகின்றன.
இங்கிலாந்தின் முன்னாள் வீரர் இயோன் மோர்கன், முன்னாள் இங்கிலாந்தின் உலகக் கோப்பை வென்ற பயிற்சியாளர் ட்ரெவர் பெய்லிஸ் ஆகியோரை அணுகியுள்ளதாக அறிக்கை மேலும் கூறுகிறது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், பயிற்சியாளர் அனுபவம் இல்லாததால், மோர்கனின் பெயர் பெரும் ஆச்சரியத்தை அளிக்கிறது. 50 ஓவர் ஆண்கள் உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியின் ஒரே கேப்டன் மோர்கன்.
அந்தப் போட்டியில் மோர்கனின் இங்கிலாந்து அணிக்கு பயிற்சியாளராக இருந்த பெய்லிஸ், இந்தப் பணிக்கான மற்றொரு போட்டியாளர்.
பெய்லிஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (SRH) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) ஆகியவற்றுடன் பணியாற்றியுள்ளார். WC வெற்றியாளர் என்பதைத் தவிர, பெய்லிஸ் KKR உடன் இரண்டு முறை ஐபிஎல் கோப்பையையும் கைப்பற்றினார்.
கெளதம் கம்பீர் 2011 முதல் 2017 வரை KKR கேப்டனாக இருந்த காலப்பகுதியில் பெய்லிஸ் பங்களிப்பை மறக்க முடியாது.
அதேநேரம் குறித்த தலைமை பயிற்சியாளர் பணிக்காக அணுகப்பட்ட முன்னாள் இந்திய பயிற்சியாளரின் பெயர் அறிக்கையில் வெளியிடப்படவில்லை.
எதுஎவ்வாறாயினும் தகவல்களின்படி பஞ்சாப் அணி புதிய பயிற்சியாளரை தேடுவது உறுதியாகியுள்ளது.