ஐபிஎல் போட்டிகளில் வெற்றிகரமான அணியாக வலம்வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் ஹஸ்சி கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து தாயகத்தை அடைந்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகள் இடை நிறுத்தப்பட்டபோது சென்னை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் ஹஸ்சி, பந்துவீச்சு பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜி ஆகியோர் கொரோனாவுக்கு முகம் கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த இருவரும் பூரண சுகம் பெற்று உள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டுவிட்டர் ஊடாக குறிப்பிட்டுள்ளது.
நேற்று காலை அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 32 ஐபிஎல் குழாத்தினர் அவர்களுடைய தாயகத்தை சென்றடைந்தனர், ஆனால் அவர்களோடு மைக் ஹசி சென்றிருக்கவில்லை ,ஆயினும் மைக் ஹஸ்சி கட்டார் ஊடாக அவுஸ்ரேலியாவை சென்றடைந்துள்ளதாக சென்னை நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.