இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான லஹிரு திரிமான்னவுக்கு கொரோனா தோற்று உறுத்திப்படுத்தப் பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனக்கு கொரோனா தோற்று ஏற்பட்டமை தொடர்பில் திரிமான்ன டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.
எனக்கு கொரோனா குறித்த எதுவித அறிகுறிகளும் தென்படவில்லை , எங்கிருந்து எனக்கு வைரஸ் தோற்று ஏற்பட்டது என்று எனக்குத் தெரியவில்லை என லஹிரு திரிமான்ன தெரிவித்துள்ளார்.
லஹிரு திரிமான்ன விரைவாக மீண்டு வரட்டும் என்று எங்கள் பிரார்த்தனைகள்.