கொல்கத்தாவும், கோலியும் ஒரே நாளில் படைத்த அபூர்வ சாதனை- கொஞ்சம் வித்தியாசமான சாதனைதான்..!
14வது ஐபிஎல் தொடரின் இரண்டாம் கட்ட போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன.
இன்றைய 31ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் விளையாடின.
இந்த போட்டியில் RCB அணியின் தலைவர் விராட் கோலி ஒரு சாதனை படைத்தார், ஐபிஎல் போட்டிகளில் ஒரே அணிக்காக 200 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை கோலி தனதாக்கினார்.
ஏற்கனவே இந்த பட்டியலில் தோனி 182 போட்டிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார் ,தோனி சென்னை அணிக்காக சாம்பியன் லீக் போட்டிகள் அடங்கலாக 200 போட்டிகளுக்கு மேல் விளையாடினாலும் IPL இல் 182 போட்டிகளில் விளையாடி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதே நேரத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இன்றைய போட்டி அவர்களது 200வது ஐபிஎல் போட்டியாக அமைந்துள்ளது.
200வது ஐபிஎல் போட்டியில் இன்று கோலி தலைமையிலான RCB அணியை 92 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க செய்தனர்.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் ஐபிஎல் போட்டிகளில் கோலி அறிமுகமான போது, கொல்கத்தா தமது முதல் IPL போட்டியை ஆடினர், அந்த போட்டியில் 82 ஓட்டங்களுக்குள் ஆர்சிபி ஆட்டமிழந்தது.
கோலி 200 வது IPL போட்டியில் விளையாடும்போது அதுவே கொல்கத்தாவிற்கும் 200 வது போட்டியாக அமைந்தமை ஆச்சரியம்தான்.
அன்று 82 ,இன்றைய போட்டியில் ஆர்சிபி 92 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து கொண்டமை சுவாரசியமான சாதனையாக பார்க்கப்படுகிறது.