கொழும்பு ஹமீட் அல்ஹுசேனியா கல்லூரியின் ஜனாதிபதிபதி சவால் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி..!

கொழும்பு ஹமீட் அல்ஹுசேனியா கல்லூரியினால் பதினான்காவது தடவையாக நடத்தப்படும் ஜனாதிபதி சவால் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு அண்மையில் கொழும்பு உதைபந்தாட்ட சம்மேளன தலைமையகமான உதைபந்தாட்ட இல்லத்தில் நடைபெற்றது.

இந்த ஆண்டு, இருபது முன்னணி பாடசாலை அணிகள் போட்டியில் பங்கேற்க உள்ளன.

போட்டிகள் பெப்ரவரி 3ஆம் திகதி ஆரம்பமாகி இறுதிப் போட்டி மார்ச் 19ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன் ஆரம்பப் போட்டிகள் சுகததாச விளையாட்டு மைதானத்திலும் இறுதிப் போட்டி கொழும்பு குதிரைப் பந்தய திடல் சர்வதேச கால்பந்தாட்ட மைதானத்திலும் நடைபெறவுள்ளது.

ஹமீத் அல்ஹு சைனியா பாடசாலையின் அதிபர் திரு. ரிஸ்கி மற்றும் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் உத்தியோகத்தர்களும் மாணவர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.