கோலியின் அசத்தல் சதம்- ஆப்கானிஸ்தானை வென்றது இந்தியா..!

மிகவும் சூடுபிடித்துள்ள இந்த ஆண்டுக்கான ஆசியக் கிண்ணப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ள இரு அணிகளும் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுவிட்டன.

மேலும், சூப்பர் 4 பிரிவின் கீழ் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான இறுதிப் போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று இரவு தொடங்கியது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது.

 

அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 2 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் என்ற அபார வெற்றி ஸ்கோர் போர்டை உருவாக்கியது.

இங்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது முதல் டி20 சதத்தை அடித்ததோடு, டி20யில் 3500 ஸ்கோரையும் கடந்தார்.சர்வதேச அரங்கில் சதமடித்த விராட் கோலி கடைசியாக 2019 நவம்பரில் சர்வதேச சதம் அடித்தார். 1021 நாட்கள் கடந்துவிட்டன பின்னர் கோஹ்லி இன்று தனது 71 வது சதம் அடித்தார்.

இன்றைய போட்டியில் இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, லோகேஷ் ராகுலுடன் இணைந்து இந்திய இன்னிங்ஸை துவக்கும் பொறுப்பு விராட் கோலிக்கு வழங்கப்பட்டது அதனை சரியாக பயின்படுத்திய கோலி சதமடித்து தனது விமர்சனங்களைத் துடைத்தெறிந்தார்.

பதிலுக்கு 213 இடம் இமாலய இலக்குடன் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆரம்பம் முதலே புவனேஸ்வர்குமார் அதிர்ச்சி கொடுத்தார். தொடர்ச்சியாக நான்கு ஓவர்களையும் வீசிய புவனேஸ்வர் குமார் 4 ஓட்டங்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

ஆயினும் போராடிய ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 111 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பு ிழக்கப்பட்ட நிலையில் இந்தியா 101 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது, ஆட்டநாயகன் விருது கோலிக்கு வழங்கப்பட்டது.