கோலி காண்பித்த சங்கு ஊதும் சைகையின் அர்த்தம் என்ன- கேள்விக் கணைகளைத் தொடுக்கும் ரசிகர்கள்..!

கோலி காண்பித்த சங்கு ஊதும் சைகையின் அர்த்தம் என்ன- கேள்விக் கணைகளைத் தொடுக்கும் ரசிகர்கள்..!

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில்் நடைபெற்று வருகிறது.

4 போட்டிகள் நிறைவுக்கு வந்துள்ளன, நான்காவது போட்டியில் இந்திய அணி மிகச்சிறப்பாக 157 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டி இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற தருணத்தில் இங்கிலாந்தின் விக்கெட்டுகள் கைப்பற்றப்டுகின்ற சந்தர்ப்பத்தில் கோலி, இரண்டு கைகளையும் எடுத்துக் கொண்டு சங்கூதும் சைகை காண்பித்தார்.

 

Trumpet வாசிப்பது போன்று சைகை காண்பித்தார், இதற்கு பலரும் பலவிதமான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர் .

குறிப்பாக ஹசீப் ஹமீத், பெயர்ஸ்டோ ஆகியோரின் விக்கட்டுக்கள் கைப்பற்றிய போது இரண்டு சந்தர்ப்பங்களில் கோலி இந்த மாதிரி சங்கு ஊதும் சைகை காண்பித்தார் .

கோஹ்லி ஏன் அதை செய்தார் என்பதற்கு உறுதியான ஆதாரம் இல்லை, ஆனால் இந்திய கேப்டன் ஓவல் ஸ்டாண்டில் உள்ள ‘பார்மி ஆர்மி’யைச் சேர்ந்த இங்கிலாந்து ரசிகர்களின் ஒரு பிரிவை கேலி செய்ய முயன்றதாகத் தோன்றியது, அவர்கள் தமது அணியை உற்சாகப்படுத்த சங்கு (Trumpet) ஊதினார்கள் .

‘இந்தியாவைப் பொறுத்தவரை போட்டி எப்படி செல்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், களத்தில் விராட் கோலியின் வெளிப்பாட்டைப் பாருங்கள்’ என்று இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் ஒருமுறை வர்ணனையின் போது கூறினார்.

இது விராட் கோலியின் இயல்பை அழகாக தொகுத்தது. இந்திய கேப்டன் கோலியின் கொண்டாட்டங்களுக்கு எல்லை இல்லை. அவரது வெளிப்பாடுகள் எப்பொழுதும் தடுப்பில்லாதவை, சில சமயங்களில் விமர்சனங்களையும் ஈர்க்கின்றன, ஆனால் இந்தியா வெல்லும் வரை அவர் சிறிதும் கவலைப்படவில்லை என்பது தெட்டத்தெளிவு.

இந்தியர்களை, இங்கிலாந்து ரசிகர்கள் கிண்டல் செய்ததற்கு பதிலடி கொடுப்பதற்காகவே கோலி இவ்வாறு சங்கு ஊதும் சைகை காண்பித்ததாகவும் ட்விட்டரில் கருத்துகள் வெளியிடப்படுகின்றன.