கோலி, பாபர் அசாமையே பின்தள்ளி மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளிலும் கலக்கும் புஜாரா -புதிய சாதனை…!

2022 ரோயல் லண்டன் ஒருநாள் கோப்பையில் சசெக்ஸ் அணிக்காக இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா  மேலும் ஒரு பரபரப்பான சதத்தை சசெக்ஸ் அணிக்காக விளாசினார்.

புஜாரா நடப்பு சீசனில் தனது மூன்றாவது சதத்தை 75 பந்தில் நிறைவு செய்தார் மேலும் தனது இன்னிங்சில் 90 பந்துகளில் 132 ரன்கள் எடுத்தார். டாம் அல்சோப் 155 பந்தில் 189 ரன்கள் எடுத்தார், சசெக்ஸ் முதல் இன்னிங்ஸில் 400/4 ரன்களை குவித்தது.

இந்தப் போட்டியில் சசெக்ஸ் அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், புஜாரா  இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை எலைட் பட்டியலில் விஞ்சினார்.

34 வயதான அவர் நேற்றைய போட்டியில் 146.22 ஸ்ட்ரைக் ரேட்டுடன், 20 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களை அடித்தார். அவரது அற்புதமான ஆட்டத்தால், புஜாரா லிஸ்ட் A கிரிக்கெட்டில் தனது சராசரி ஸ்கோரை 57.49 ஆக உயர்த்தினார், இது முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலியின் 56.50 ஐ விட அதிகமாகும். இதேநேரத்தில் தற்போதைய கிரிக்கெட் உலகின் நட்சத்திரம் பாபர் அசாமை (56.16) விடவும் அதிகமானதாகும்.

செவ்வாயன்று இந்திய கிரிக்கெட் வீரரின் ஆட்டத்தால் ராயல் லண்டன் ஒரு நாள் கோப்பையில் 500 ரன்களைக் கடந்தார். மொத்தம் மூன்று சதங்களை உள்ளடக்கிய எட்டு இன்னிங்ஸ்களில் 614 ரன்களுடன், இந்த சீசனில் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் அவர் தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளார்.

புஜாரா எட்டு ஆட்டங்களில் 9 (16), 63 (71), 14* (7), 107 (79), 174 (131), 49* (68), 66 (66), 132 (90) ரன்களை பதிவு செய்துள்ளார்.