ஒரு சிறந்த டெஸ்ட் வீரராக ஸ்டீவ் ஸ்மித்தின் பாரம்பரியம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது என்பதற்கு அவரது சாதனைப் புள்ளி விபரங்கள் சான்று பகிர்கின்றன.
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் அஸ்திரேலியாவின் ஸ்மித் தனது 151வது இன்னிங்ஸில் மைல்கல்லை எட்டியதன் மூலம், அதிவேகமாக 8,000 ரன்களைக் கடந்தவர் ஆனார்.
தனது 152வது இன்னிங்சில் இந்த சாதனையை எட்டிய இலங்கை ஜாம்பவான் குமார் சங்கக்காரவை ஸ்மித் வீழ்த்தினார்.
இதன்முலம் சச்சின், சங்ககார ஆகியோரது முன்னைய சாதனையை ஸ்மித் முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.