சனத் , டில்ஷான் ,தரங்க பாணியில் அவுஸ்ரேலியாவில் கிரிக்கெட் ஆட தயாராகும் திரிமான்ன..!

சனத் , டில்ஷான் ,தரங்க பாணியில் அவுஸ்ரேலியாவில் கிரிக்கெட் ஆட தயாராகும் திரிமான்ன..!

இலங்கையின் திரிமான்ன முல்கிரேவ் கிரிக்கெட் கழகத்தில் விளையாடுவதற்காக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக அந்த கிரிக்கெட் கழகம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே முல்கிரேவ் கழகத்தின் தலைமை பயிற்சியாளராக சனத் ஜெயசூரிய நியமிக்பட்ட நிலையில்  தரங்க ,டில்சான் ஆகியோரை தொடர்ந்து இலங்கையின் 32 வயதான டெஸ்ட் துடுப்பாட்ட வீரரான திரிமான்ன இந்த அணியில் இணைந்து கொள்ளப்பட்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

42 டெஸ்ட் போட்டிகளிலும், 127 ஒருநாள் போட்டிகளிலும் 26 டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணிக்காக விளையாடிய திரிமான்ன, முல்கரேவ் கிரிக்கெட் கழகத்துக்காக இந்த ஆண்டின் போட்டிகளுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை முக்கியமானது.

இலங்கையர்கள் பலர் இந்த கழகத்தின் முக்கிய பொறுப்புகளிலும் ,பதவிகளிலும் இருக்கும் நிலையில் இப்போது திரிமான்னவும் இந்த கழகத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.